கரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட கடன் தவணை சலுகை காலத்தில் வட்டியை ரத்து செய்ய
கோரி வழக்கு அரசிடம் விளக்கம் கேட்கிறது உச்ச நீதிமன்றம்
கரோனா பாதிப்பால்
வங்கிக் கடன் தவணை செலுத்துவற்காக அறிவிக்கப்பட்ட சலுகை காலத்தில், கடனுக்கான
வட்டியை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவுவதைத்
தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற் போது படிப்படியாக விலக்கப்பட்டு வருகிறது.
இதனால் மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலான கடன்களுக்கான தவணை
செலுத்துவதற்கான அவகாசம் வழங்கப்பட் டது.
தற்போது மேலும் 3 மாதங்கள்
நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்
கடனுக்கான வட் டியை தள்ளுபடி செய்யலாம் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுதொடர்பாக விளக்
கம் அளித்த ரிசர்வ் வங்கி, வட்டியை தள்ளுபடி செய்தால் அது வங்கிகளின் நிதி நிலையை
குலைத்துவிடும் என தெரிவித்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நிதி
அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விஷயத்தில் இரண்டு
விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
‘‘சலுகை காலத்தில் கடனுக்கு வட்டி வசூலிக்கக் கூடாது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி
உரிய உத்தரவை வங்கிகளுக்கு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என
கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண், எம்ஆர் ஷா ஆகியோர்
அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர்
ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் விளக்கத்தை
அளிப்பதாகவும் அதற்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தத்தா வாதிட்டபோது கூறியதாவது:
இந்த விஷயத்தில் வங்கிகளின் லாபம் பிரதானம் என்பதை ரிசர்வ் வங்கி தனது விளக்கத்தின்
வாயிலாக தெளிவுபடுத்தி உள்ளது தற்போது புலனாகியுள்ளது. கரோனா காலத்தில் நாட்டின்
நலனைவிட வங்கிகள் தங்களது லாபமே பிரதானம் என்று கருதுவதை இது காட்டுகிறது.
ஏர்
இந்தியா விமானத்தில் நடு இருக் கையை காலியாக விட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட
போதிலும், வெளி நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும்போது, அனைத்து
இருக்கைகளிலும் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். மனிதர் களின் உயிரை விட,
பொருளாதாரம்தான் பிரதானம் என அரசு கருதுகிறது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து
இதுதொடர்பாக ஜூன் 12-ம் தேதிக்குள் நிதி அமைச்சகம் விளக்கம் அளிக்குமாறு
நீதிபதிகள் அறிவுறுத்தியுள் ளனர். மேலும் நீதிமன்றத்துக்கு பதிலை தெரி விக்கும்
முன்பாகவே ரிசர்வ் வங்கி ஊடகத் துக்கு தெரிவித்துள்ளதையும் நீதிமன்றம் கவனத்தில்
கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற நடைமுறை இனிவரும் காலங்களில்
நடைபெறாமல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment
Please Comment