உலக ஒலிம்பிக் தினம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை மாதம் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தன. கொரோனா பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கியதன் காரணமாக அடுத்த ஆண்டுக்கு இந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுவும் அப்போது நிலைமை சீராக இருந்தால்தான் போட்டி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுவிட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஒலிம்பிக் போட்டி, முன்காலத்தில் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் தான் நடத்தப்பட்டு வந்தது.
1894-ம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் பியரி டி கூபர்டின் என்பவர், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவினார்.
அந்த தினம்தான் இன்றுவரை உலக ஒலிம்பிக் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்பட்டது,
1948-ம் ஆண்டு. இந்த தினத்தை ஒட்டி பல நாடுகளில் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி நடத்தப்படும். அடுத்த தலைமுறையினரிடம் ஒலிம்பிக் போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த விழாவின் போது அதில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், சிறுவர் மற்றும் சிறுமியர்களை சந்தித்து, அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதோடு, அந்த சிறுவர்களை விளையாட்டுத்துறையில் உற்சாகமாக ஈடுபட ஊக்குவிப்பதையும் வழக்கமாக வைத்திருக் கிறார்கள்.
பி.சிவசங்கர்,
12-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப்பள்ளி,
சோமங்கலம்,
காஞ்சிபுரம்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
பி.சிவசங்கர்,
12-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப்பள்ளி,
சோமங்கலம்,
காஞ்சிபுரம்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment