4-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா சிகிச்சை அளிக்க தயார்படுத்த வேண்டும் சரத்குமார் வேண்டுகோள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

4-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா சிகிச்சை அளிக்க தயார்படுத்த வேண்டும் சரத்குமார் வேண்டுகோள்

4-ம் ஆண்டு மருத்துவ மாணவர்களை கொரோனா சிகிச்சை அளிக்க தயார்படுத்த வேண்டும் சரத்குமார் வேண்டுகோள் 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் மருத்துவமனைகளில் உள்ள 18 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவாசக்கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அதிகரித்து கொரோனாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். 

பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தால், தற்போது உள்ள மருத்துவர்களை விட அதிகமான மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4-ம் ஆண்டு மருத்துவ கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களை தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிக்கும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. 

தேர்தல் காலத்தில் பொதுமக்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வீடுதோறும் பூத் சிலிப் வழங்குவதை போல, சுகாதாரத்துறை வழிகாட்டுதலோடு, பூத் அட்டவணைப்படி, சிறப்பு குழு அமைத்து 4 மாவட்டங்களில் வீடுதோறும் கொரோனா பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment