18 பேர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கான பாடங்களை குறைக்க நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. பாடப்புத்தகங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.
இதைத்தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. கொரோனா பாதிப்பால், பள்ளி செயல்படும் நாட்கள் குறைவாக இருப்பதால், முக்கிய பாட பகுதிகளை மட்டும் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு சில பக்கங்களை குறைக்க 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாடங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:
Post a Comment
Please Comment