வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பல்வேறு சவால்களை வரி செலுத்துவோர் சந்தித்து வருகிறார்கள். எனவே அவர்கள் ஆசுவாசப்படும் வகையில் வருமான வரி செலுத்த வேண்டிய கால அளவை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ந் தேதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய நவம்பர் 30-ந் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment