‘இலக்குகள் 2021’ - வழிகாட்டல் வகுப்புகள் (Guidance classes) அறுசுவையாய் 6 தலைப்புகளில் நடக்கிறது
இந்து தமிழ் திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை கேபிஆர் கலை
அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும்
தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை சார்பில் ‘இலக்குகள் 2021’ எனும் வழிகாட்டல் வகுப்பு
கள் ஜூன் 15 முதல் 6 நாட்கள் நடைபெறவுள்ளன.
கரோனா ஊரடங்கு நீடித்து வரும் சூழலில்
பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும்
கலந்துகொள்ளும் வகையில் இணைய வழியிலான இலவச வழிகாட்டல் வகுப்புகள் வரும் 15-ம் தேதி
தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
வழிகாட்டி வகுப் புகள்
முதல் நாள் (ஜூன் 15) வகுப் பில்
தமிழ்ச்செம்மல் விருதாளர், கவிஞர் தங்கம் மூர்த்தி ‘பெற்றோர் களுக்கான
வீட்டுப்பாடங்கள்’ எனும் தலைப்பிலும், 2-ம் நாளில் எழுத்தாளரும் பதிப்பாளருமான
பத்ரி சேஷாத்ரி ‘இணையவழி வகுப்பறைகளின் அவசியம்’ எனும் தலைப்பிலும், 3-ம் நாளில்
பட்டி மன்ற நடுவரும் நடிகருமான பேராசி ரியர் கு.ஞானசம்பந்தன் ‘நகைச் சுவையே நல்ல
சுவை’ எனும் தலைப்பிலும், 4-ம் நாளில் அண்ணா பல்கலை. மேனாள் துணைவேந் தர், முனைவர்
மன்னர் ஜவஹர் ‘பொன்னான பொறியியல் வாய்ப்பு கள்’ எனும் தலைப்பிலும், 5-ம் நாளில்
அழகப்பா பல்கலை.மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா ‘உறவுகள் மேம்பட’ எனும்
தலைப்பிலும், 6-ம் நாள் இந்திய வருமானவரித் துறை கூடு தல் ஆணையர் ஆர்.நந்தகுமார்,
‘வாழ வழி - வேற வழி’ எனும் தலைப்பிலும் உரையாற்றுகின்றனர். அறுசுவையாக 6 நாட்கள்
நடை பெறவுள்ள இந்த வழிகாட்டி வகுப் புகள் காலை 11 முதல் 12.30 மணி வரை
நடைபெறவுள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்கலாம். இணைப்புக்கான zoom
ID 6251621064 (password AIM2021). இதில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ்
வழங்கப்படும். கூடுதல் தகவல் களுக்கு 9994119002 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு
கொள்ளவும்.
இந்து தமிழ் திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை கேபிஆர் கலை அறிவியல்
- ஆராய்ச்சிக் கல்லூரி, காரைக்குடி ராஜராஜன் பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரி
இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன.
No comments:
Post a Comment
Please Comment