‘சப்கா விஸ்வாஸ்’ திட்டத்தில்
வரி தொகையை செலுத்த 30-ந்தேதி கடைசி நாள் ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் அறிவிப்பு
ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
‘சப்கா விஸ்வாஸ்’ (வரி நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணும் திட்டம்) திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதி வருகிற 30-ந்தேதி என்பது வரி செலுத்துவோர் மற்றும் விண்ணப்பதாரர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
எனவே இந்த திட்டத்தின் கீழ் எஸ்.வி.எல்.டி.ஆர்.எஸ்3 வழங்கப்பட்ட மற்றும் இதுவரை திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நிலுவைத்தொகையை செலுத்தாத அனைத்து வரி செலுத்துவோர் மற்றும் விண்ணப்பதாரர்கள் தயவுசெய்து 30-ந்தேதியன்று அல்லது அதற்கு முன்பு நிலுவைத்தொகையை செலுத்தவும்.இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தாமல், விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரி, வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்படமாட்டார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட தொகை 30-ந்தேதிக்கு முன்னர் செலுத்தப்படாவிட்டால், திட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு இருந்தபடி விண்ணப்பதாரர்களின் நிலைப்பாடு மீட்டமைக்கப்படும். மேலும் அனைத்து நிவாரணங்களையும் இழக்க நேரிடும். அதாவது 40 சதவீதம் அல்லது 60 சதவீதம் வரி நிவாரணம் தரப்படமாட்டாது.
மேலும் நீதிமன்றத்தின் முன் இருந்த வழக்கு தொடரப்படும் மற்றும் தகுந்த அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.
எனவே மேற்கூறிய விளைவுகளை தவிர்ப்பதற்கும், கடந்த கால வரி வழக்குகளை தீர்ப்பதற்கும், வரி செலுத்துவோர் மற்றும் விண்ணப்பதாரர்கள் 30-ந்தேதியன்று அல்லது அதற்கு முன்னர் இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டபடி வரி தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment