தமிழ்நாடு மத்திய பருவத் தேர்வுகள் ரத்து :தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு
திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரகுபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தவிர மற்ற கல்வியாண்டு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்தன.
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் 15-ம் தேதிவரை ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது அனைத்து கல்வியாண்டு மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப் படுகின்றன.
இன்டர்னல் மதிப்பெண் மற்றும் இதற்கு முன்னர் நடைபெற்ற பருவத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களைக் கணக்கில்கொண்டு, இந்த பருவத் தேர்வுக்கு தேர்ச்சி அறிவிக்கப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment