கரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவில் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவில் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி

கரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக குழுவில் இந்திய வம்சாவளி பெண் 

விஞ்ஞானி கரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளது. இந்த குழுவில் இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி சந்திரபாலி தத்தாவும் இடம்பெற்றுள்ளார். 

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்த சந்திரபாலி தத்தா (34) ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஜென்னர் நிறுவனத்தின் கிளினிகல் பயோமேனுபேக்சரிங் மையத்தில் பணியாற்றுகிறார். 

இந்த ஆராய்ச் சிக் குழு உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தான சாடாக்ஸ்1 என்கோவ் 19 (chAdOx1 nCoV-19) தற்போது மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. 

இந்த சோதனை 2-வது மற்றும் 3-வது கட்டத்துக்கு சென்றுள்ளது. இந்த குழுவில் தத்தா, தர உத்தர வாத மேலாளராக பணியாற்று கிறார். தடுப்பு மருந்து பரிசோதனை நிலைக்கு செல்லும் போது அனைத்து கட்டங்களிலும் தர நிபந் தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதுதான் தத்தாவின் பணி. 

இதுகுறித்து தத்தா கூறிய தாவது: 

எங்களது தடுப்பு மருந்துக்காக உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்துள்ள மரியாதையாக கருதுகிறோம். 

இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் நான் இடம்பெற்றிருப்பதை மனித குலத் துக்கு செய்யும் பணியாக கருது கிறேன். லாப நோக்கமில்லாதது எங்கள் நிறுவனம். கரோனா வைரஸ் தடுப்பு மருந்தை வெற்றிகர மாக தயாரிப்பதற்காக தினமும் கூடுதல் நேரம் பணியாற்றுகிறோம். 

இதனால் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும். எங்கள் குழுவின் உற்பத்தி பிரிவில் 25 வல்லுநர்கள் உள்ளனர். பெண்களும் ஆண்களும் ஏறக் குறைய சம எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளனர். உயிரி அறிவியல் துறையானது ஆண்கள் ஆதிக்கம் மிக்கது என்ற கண்ணோட்டத்தை பெண்கள் மாற்ற வேண்டும். 

இந் திய இளம்பெண்கள் இந்த துறை யில் நுழைய வேண்டும். ஊக்கத் துடன் இறங்கினால் சவாலை வெல்லலாம். உயிரி தொழில்நுட் பத் துறை மற்றும் மருந்து உற்பத்தி துறையில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக உள்ளனர். இந்த துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 

நமது வாழ்வில் இதுபோன்ற வைரஸை நாம் பார்த்ததில்லை. இப்போதைய முழு கவனமும் மக் களின் வாழ்வை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதும் மக்கள் உயிர் களை காப்பாற்றுவதுமே ஆகும். இவ்வாறு தத்தா கூறினார். 

கொல்கத்தாவில் பொறியியல், உயிரி தொழில்நுட்பப் படிப்பை முடித்துள்ள தத்தா கணிப்பொறி அறிவியலும் படித்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு வேலையில் சேர்ந்துள்ளார்.


No comments:

Post a Comment

Please Comment