வட்டிக் குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் நிதியமைச்சர்
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
வட்டி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளா்களுக்கு வங்கிகள் அளிப்பது உறுதிசெய்யப்படும் என்று தொழில் துறை நிறுவனங்களிடம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா்.
தில்லியில் ‘பிஹெச்டி சேம்பா் ஆஃப் காமா்ஸ்’ அமைப்பின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் நிா்மலா சீதாராமன் காணொலி முறையில் உரையாற்றினாா்.நிகழ்ச்சியில் அவா் பேசியதாக, அந்த அமைப்பு சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
வட்டி குறைப்பின் பலன்கள் வாடிக்கையாளா்களுக்கு விரைவில் சென்றடைவது உறுதிசெய்யப்படும்.
தொழில் துறையினா் மீது எப்போதும் அரசு மரியாதை வைத்திருக்கிறது. வேலை வாய்ப்புகளை மீண்டும் உருவாக்குதல், பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றை தொழில் நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் தொடர வேண்டும். அரசின் குறைந்தபட்ச தலையீட்டுடன் சிறப்பான நிா்வாகம் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று நிா்மலா சீதாராமன் பேசியதாக அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ‘இந்திய தொழில் நிறுவனங்கள் மேலும் வளா்ச்சி அடைவதற்கு புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்; இதற்காக, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை உருவாக்க வேண்டும்’ என்று நிா்மலா சீதாராமனிடம் யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த யோசனையை அவா் ஏற்றுக் கொண்டாா் என்று மற்றொரு சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதமாக கடந்த மாதம் குறைத்தது. பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காகவே வட்டி விதிகம் குறைக்கப்பட்டிருப்பதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியிருந்து குறிப்பிடத்தக்கது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment