இந்திய அளவில் சிறந்த கல்லூரி எது தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்திய அளவில் சிறந்த கல்லூரி எது தெரியுமா?

இந்திய அளவில் சிறந்த கல்லூரி எது தெரியுமா? 

 மஹேந்ரா கலை, அறிவியல் கல்லூரி இந்திய அளவில் சிறந்த கல்லூரியாக தேர்வு 

 காளிப்பட்டி மஹேந்ரா கலை, அறிவியல் கல்லூரி இந்திய அளவில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தரவரிசை பட்டியல் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பு, 2020-க்கான இந்திய அளவிலான சிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை கற்றல் மற்றும் கற்பித்தல் தரம், ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வெளியீடுகள், வேலைவாய்ப்பு, மாணவர்கள் தேர்ச்சி விகிதம், சமூக மேம்பாடு போன்ற அளவுருக்கள் மூலம் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. 

  சிறந்த கல்லூரி 

 தேசிய அளவில் ஏறத்தாழ 1,659 கல்லூரிகள் பதிவு செய்ததில், இதில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி மஹேந்ரா கலை, அறிவியல் கல்லூரியை (தன்னாட்சி) தேர்வு கமிட்டி தேர்வு செய்துள்ளது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவியர் இந்த தரவரிசை அடிப்படையில், கல்லூரிகளை தேர்வு செய்ய உதவி புரியும். இக்கல்லூரி தேசிய அளவில் 90-வது இடத்தை பிடித்துள்ளது. 

 சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி உள்ளடக்கிய மாவட்டங்களில் 80-க்கும் அதிகமான கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் கிராமப்புறம் சார்ந்த ஒரு கல்லூரி இதுபோன்ற சிறப்பிடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையை அடைய உதவிபுரிந்த கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment