10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசனை
சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. தகவல்
கொரோனா பரவி வரும் நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. ஜூலை 1-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை நடத்த இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யுமாறும், ஏற்கனவே நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மீதம் உள்ள தேர்வுகளை மதிப்பிடுமாறும் அமித் பாட்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடைபெற்றது.
விசாரணை துவங்கியதும் சி.பி.எஸ்.இ. தரப்பில், ‘ஜூலை 1-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக சி.பி.எஸ்.இ. ஏற்கனவே ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து உரிய முடிவு விரைவில் எடுக்கப்படும். எனவே, இது தொடர்பாக எடுக்கப்படும் முடிவை கோர்ட்டுக்கு தெரியப்படுத்தும் வகையில் மேலும் சிறிது அவகாசம் தேவை’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வருகிற 23-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment