போலியான அறிவிப்பை நம்ப வேண்டாம்
நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை
தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வு, கொரோனா நோய்த்தொற்று காரணமாகi வருகிற ஜூலை மாதம் நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை(என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
ஆனால் இந்த தேர்வை நடத்த உள்ள தேசிய தேர்வு முகமை அதை திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது. இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமையின் டைரக்டர் ஜெனரல் வினீத் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜூலை மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஒரு போலியான அறிவிக்கை சமூiக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது தேசிய தேர்வு முகமையின் கவனத்துக்கும் வந்தது. அதை தீவிரமாக கவனித்து வருகிறோம்.
இதுபோன்று போலியான அறிவிப்பின் மூலம் தேர்வர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை தவறாக வழிநடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுiக்கப்படும்.
இதுவரை தேர்வு ஒத்திவைப்பது குறித்து தேசிய தேர்வு முகமையோ அல்லது அதனை சார்ந்த அதிகாரிகளோ எந்த முடிவும் எடுக்கவில்லை. www.nta.ac.in, nta-n-eet.nic.in என்ற இணைiயதளங்களில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் தகவல்களை மட்டும் நம்பவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment