தங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு விலை உயர்வு
தங்கம் விலை முதன்முறையாக
ஒரு பவுன் ரூ.37,200-ஐ கடந்தது
சென்னை
தங்கம் விலை முதன்முறையாக ஒரு பவுனுக்கு ரூ.37,200-ஐ நேற்று கடந்தது.
கரோனா வைரஸ் பரவல் காரண மாக உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி குறையத் தொடங்கியுள் ளது. இதனால், முதலீட்டாளர் களும், பொதுமக்களும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை முதன்முறையாக ஒரு பவுன் ரூ.37,200 -ஐ கடந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.392 உயர்ந்து ரூ.37,272-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4,659-க்கு விற்பனை ஆனது.
இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,610-க்கு விற்கப்பட்டது.
மேலும் உயர வாய்ப்பு
இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியா பாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘கரோனாவால் மக்கள், நகை கடைகளுக்கு வந்து செல்வது குறைந்துள்ளது.
பங்குச்சந்தை யில் சரிவு காணப்பட்டாலும், தங்கம் சார்ந்த முதலீடுகள் அதி கரித்து வருகின்றன. இதனால், தங்கம் விலை எப்போதும் இல் லாத அளவுக்கு உயர்ந்துள் ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment