கரோனா பரவல் அச்சம் இருப்பதால்
மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
கரோனா வைரஸ் பரவல் அச்சம் இருப்பதால் இளநிலை மருத்துவக்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்படியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும். நீட் தேர்வு வேண்டாம்
அதேபோல், வரும் ஜூலை 26-ம் தேதி நடத்த திட்டமிடப் பட்டுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment