இயற்கையான முறையில் பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி...? How to Make Papaya Face Pack Naturally ...
பப்பாளி ஃபேஸ் பேக்
1:
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன்
சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின் விழுது முகத்தில் உள்ள
துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.
பப்பாளியின் விழுது கால் கப்,
தேன் அரை
தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில்
தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு
நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி ஃபேஸ் பேக் 2:
பப்பாளி
மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது
குறைந்துவிடும்.
மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது. பப்பாளி விழுது
தேவையான அளவு, ஆரஞ்சு சாறு 3 தேக்கரண்டி ஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு
எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். How to Make Papaya Face Pack Naturally ...
இதனை
முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால்
முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.
பப்பாளி ஃபேஸ் பேக் 3:
உங்கள் சருமத்தை
பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ்
பேக் போடலாம்.
சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும். பப்பாளி,
வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.
இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி
விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment