TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை!

TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை! 

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்சிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு படித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.1.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

நிர்வாகம் : தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மேலாண்மை : 

தமிழக அரசு பணி : பொது மேலாளர் பணியிடம் : சென்னை தகுதி : வங்கியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 

ஊதியம் : ரூ.1,40,000 மாதம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். 


விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Tamilnadu Mercantile Bank Limited வங்கி பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=GMI&post=GMI20202101 என்ற இணையதளம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு முறை : 

நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tmbnet.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Please Comment