கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் நுங்கு விற்கும் மருத்துவ மாணவர்க்கு டாக்டர்
தமிழிசை சவுந்தரராஜன் உதவி
வறுமை காரணமாக நுங்கு விற்று வரும் ஏழை மருத்துவ
மாணவரின் கல்வி கட்டணத்திற்கு உதவி செய்வதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவர் சிவா
ஈரோடு மாவட்டம் எழத்தூர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் வேலூர்
அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்த
நிலையில் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் சிவா கஷ்டப்பட்டு வந்தார்.
வறுமையின் காரணமாக அவர் நுங்கு விற்பனை செய்து வந்தார். மருத்துவ படிப்பு படிக்கும்
மாணவர் சிவா வறுமை காரணமாக நுங்கு விற்று வருவது சமூக வலைத்தளங்களில் வேக வேகமாக
பரவியது.
தமிழிசை சவுந்தரராஜன் உதவி
இந்த தகவல் அறிந்த தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாணவர்
சிவா செலுத்தவேண்டிய கல்வி கட்டணத்திற்கு உதவி செய்வதாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும் மருத்துவ படிப்பை நல்லபடியாக முடித்து விட்டு, ஒரு சிறந்த மருத்துவராக
மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment