பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்க வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர்
முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில
தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேமிக்கும்
அளவு ஊதியமில்லாமலும், கையிருப்பும் கரைந்து வேதனையான, கொடுமையான இக்கொரோனா
ஊரடங்கில் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்ளனர்.
இப்பேரிடர் காலத்தில் மேமாத ஊதியம் வழங்கி
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் வாழ்வாதாரத்தை இக்கொரோனா தொற்றுகாலத்தில் மேம்படுத்த
வேண்டும். பள்ளிக்கல்வி துறையைத்தவிர பிற துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில்
பணிபுரிவோருக்கு படிப்படியாக பணிநிரந்தரம் சாத்தியமாகும் நிலையில், 9 ஆண்டுகளாக
மாணவர்களுக்கு உடற்கல்வியும், கலையும், தொழில்நுட்பத்தையும், இசையையும் போதிக்கும்
ஆசிரியர்களுக்கும் அரசு கருணை காட்டவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment