புதிதாக உருவாகியிருக்கும் 'ஸ்லீப்பிங் பியூட்டி டயட்'! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிதாக உருவாகியிருக்கும் 'ஸ்லீப்பிங் பியூட்டி டயட்'!

புதிதாக உருவாகியிருக்கும் 'ஸ்லீப்பிங் பியூட்டி டயட்'!

நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் சாப்பிட வேண்டியதில்லை'' என்ற கருத்தை வைத்து உருவாகியிருக்கிறது ஸ்லீப்பிங் பியூட்டி டயட். உலகம் முழுவதும் எடை குறைப்புக்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அவற்றில் ஒன்று, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கினால் சாப்பிடுவதைத் தவிர்த்துவிடலாம் என்பது. விழித்திருக்கும் சிறிது நேரத்துக்கு மட்டும் வெகு குறைவாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதால் உடல் எடை குறையும் என்கிறார்கள். 

ஆனால் இந்த ஸ்லீப்பிங் டயட்டை மருத்துவ உலகம் நிராகரிக்கிறது. இதில் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் இருப்பதாகச் சொல்கிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியமான விஷயம் இல்லை. தூக்க மாத்திரைகள் இல்லாமல் இவ்வளவு நேரம் தூங்கவே முடியாது. 

இப்படி மாத்திரைகளுடன் தூங்கும்போது நாளடைவில் மாத்திரை போட்டால்தான் தூக்கம் வரும் என்ற நிலைமைக்குச் சென்றுவிடுவார்கள். இயல்பு வாழ்க்கை பாதிப்பதோடு, மனநலத்தையும் கெடுத்துவிடும். குறைந்த உணவு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்

No comments:

Post a Comment

Please Comment