மதுரை ஜி.எச்., மகப்பேறு (Maternity) வார்டுக்கு 97 மார்க் வழங்கிய மத்திய அரசு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மதுரை ஜி.எச்., மகப்பேறு (Maternity) வார்டுக்கு 97 மார்க் வழங்கிய மத்திய அரசு

மதுரை ஜி.எச்., மகப்பேறு (Maternity) வார்டுக்கு 97 மார்க் வழங்கிய மத்திய அரசு 



மதுரை; 

கர்ப்பிணிகளை சிறப்பாக கவனிப்பதாக, மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு, ஆப்பரேஷன் தியேட்டருக்கு, 100க்கு, 97 மதிப்பெண்கள் வழங்கி, மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. 

தேசிய அளவில் பிரசவம் பார்த்தல், கர்ப்பிணிகள், தாய், சேய் கவனிப்பில் சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, 'லக் ஷயா' திட்டத்தில், அங்கீகார சான்றிதழ் வழங்கி, மத்திய அரசு கவுரவிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், மதுரை அரசு மருத்துவமனையை, மத்திய குழு ஆய்வு செய்தது. இங்கு பிரசவம், கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நடைமுறைகள் சிறப்பாக இருப்பதாக, அறிக்கை சமர்ப்பித்தனர். தற்போது, இதற்கான மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை, மகப்பேறு வார்டு, ஆப்பரேஷன் தியேட்டருக்கு, 100க்கு, 97 மதிப்பெண்களும், சிறப்பு சான்றிதழும் கிடைத்துள்ளன. 'டீன்' சங்குமணி கூறியதாவது:

மகப்பேறு வார்டில், உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு வருகின்றனர்.மே மாதம் மட்டும், 903 சுகப்பிரசவம், 510 அறுவை சிகிச்சை பிரசவங்கள் என, 1,413 பிரசவங்கள் நடந்துள்ளன.சுகப்பிரசவ விகிதம், 64 சதவீதம். தவிர மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ௨௮ கர்ப்பிணிகளையும் மீட்டுள்ளோம்.

இதில், 14 பேர், நிறைமாத கர்ப்பிணியாக வந்து, கொரோனா வார்டில் சிக்கலின்றி குழந்தை பெற்றெடுத்தனர். ஒன்று மட்டும் சுகப்பிரசவம். அனைவருமே கொரோனாவிடம் இருந்து மீண்டு வீடு திரும்பிவிட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment