NEET தேர்வை தள்ளிவைப்பது குறித்து விரைவில் ஆலோசனை
NEET தேர்வை தள்ளிவைப்பது பற்றி விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை யாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலை யில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நேரத்தில் NEET தேர்வை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று பெற்றோர் கோரியுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,
“நீட் தேர்வு தொடர் பாக ஆலோசனை நடைபெற வுள்ளது. கரோனா பாதிப்பு குறையவில்லை என்றால் நீட் தேர்வை தள்ளி வைக்கு மாறு மத்திய அரசிடம் தெரிவிக் கப்படும்” என்றனர்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:
Post a Comment
Please Comment