இந்த ஆண்டு தமிழக அரசே ஏற்க கோரி வழக்கு அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இந்த ஆண்டு தமிழக அரசே ஏற்க கோரி வழக்கு அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த ஆண்டு தமிழக அரசே ஏற்க கோரி வழக்கு அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை இந்த ஆண்டு அரசே ஏற்கக் கோரி தொடரப் பட்ட வழக்கில் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை சாந்தோம் அடைக்கல அன்னை சகோதரிகள் சபை சார்பில் மரிய பிலோமி என்பவர் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ள மனு: கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட் டுள்ளன. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ப தற்காக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின் றன. ஆனால் தமிழக அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கட் டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என உத்தர விட்டுள்ளது. 

கல்வி உரிமைச் சட்டப்படி கல்வி கட்டணம் வசூலிக்க வில்லை எனில் தனியார் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்து வது என்பது இயலாத காரியம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத் தின்படி தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிதியுதவி செய்து வருகிறது. 

எனவே, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 21 ஏ-யின் படி தற்போதுள்ள இக்கட்டான சூழலில் குழந்தைகளின் கல்வி எக் காரணம் கொண்டும் தடைபட்டு விடக் கூடாது என்பதற்காக இந்த ஆண்டு மட்டும் தனியார் பள்ளி களில் பயிலும் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க உத்தரவிட வேண்டும். 

இலவச பாடப் புத்தகங்கள் மேலும், அரசுப் பள்ளிகளைப் போல தனியார் பள்ளிகளிலும் இலவச பாடப் புத்தகங்களை வழங்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் மற்றும் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தர விட்டு விசாரணையை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment