சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருள் வழங்க அனுமதி அரசாணை வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருள் வழங்க அனுமதி அரசாணை வெளியீடு

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருள் வழங்க அனுமதி அரசாணை வெளியீடு 

சத்துணவு சாப்பிடும் மாணவர் களுக்கு உலர் உணவு பொருட் களை வழங்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இதுதொடர்பாக, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலாளர் எஸ்.மதுமதி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 

சமூகநலத் துறை ஆணை யரின் பரிந்துரை மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சத்துணவு திட்டத்தின்கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 23 லட்சத்து 71 ஆயிரத்து 316 மாணவ, மாணவிகளுக்கும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக் கும் 18 லட்சத்து 89 ஆயிரத்து 808 மாணவ, மாணவிகளுக்கும் உலர் உணவு பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர் களுக்கு தலா 3,100 கிராம் அரிசி, 1,200 கிராம் பருப்பு, 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 4,650 கிராம் அரிசி, 1,250 கிராம் பருப்பு என மே மாதத்துக் கான உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும். 42 லட்சத்து 61 ஆயிரத்து 124 மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க 16,138.69 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 5,207.84 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், உலர் உணவு பொருட் களை வழங்குவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலில், “உலர் உணவு பொருட்கள் வழங் கப்படும் நாள், நேரம் குறித்த விவரங்களை பள்ளிகளில் ஒட்டி வைக்க வேண்டும். தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment