நீட் தேர்வு செப்.13-க்கு தள்ளிவைப்பு ஜேஇஇ தேர்வு காலஅட்டவணையும் மாற்றம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் தேர்வு செப்.13-க்கு தள்ளிவைப்பு ஜேஇஇ தேர்வு காலஅட்டவணையும் மாற்றம்

நீட் தேர்வு செப்.13-க்கு தள்ளிவைப்பு ஜேஇஇ தேர்வு காலஅட்டவணையும் மாற்றம் 

 நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளது. ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஊரடங்கு காரணமாக கடந்த மே 3-ம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதே போல், ஐஐடி உட்பட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறி யியல் படிப்பில் சேருவதற்கான ஜேஇஇ முதல்நிலை தேர்வு ஜூலை 18-ல் தொடங்கும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது. 

இந்நிலையில் கரோனா பாதிப் பின் தீவிரம் அதிகரித்து வருவ தால் நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க நிபுணர் குழு அமைக்கப் பட்டது. அக் குழுவின் அறிக்கை யின்படி நீட், ஜேஇஇ தேர்வுகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு மாற்று தேதி வெளியிடப்பட்டுள் ளது. 

இதுதொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘தற்போதைய சூழலில் மாணவர் களின் பாதுகாப்பை மனதில் வைத்து நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். இதையடுத்து நீட் தேர்வு செப்.13-ம் தேதி நடைபெறும். அதேபோல், ஜேஇஇ முதல்நிலை தேர்வு செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையும், ஜேஇஇ பிரதானத் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும்’’ என்று கூறியுள்ளார்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment