மகப்பேறு விடுமுறையை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மகப்பேறு விடுமுறையை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

மகப்பேறு விடுமுறையை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு

 தஞ்சாவூர் கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய்வாளராகப் பணிபுரிபவர் டி.வேதநாயகி. இவர் பணிக் காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டுகள் பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க மறுத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்து தனக்குப் பதவி உயர்வு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வேதநாயகி மனு தாக்கல் செய்தார். 

இவரைப்போல பல பெண் அரசு ஊழியர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிடுகையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12-ல் பதவி உயர்வுக்கு விடுமுறை தடையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதை பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது” என்றார். இதையடுத்து நீதிபதி, “பணிக் காலத்தில்தான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் மகப்பேறு விடுப்புக் காலத்தையும் பணிக் காலமாகக் கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும். மனுதாரரின் பெயரை 31.7.2020-க்குள் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment