ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6, மாநிலத்திட்ட இயக்குநரின் செயல்முறைகள் நக.எண்.449/c7/SS/2021 நாள் 5.092021,
அய்யா அம்மா.
பொருள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அக்டோபர் 2 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு
பார்வை
1 சட்டமன்ற கூட்டத்தொடரில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதி நிலை அறிக்கை 20212022 அறிவிப்பு.
2 சென்னை 6, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடித ந.க.எண் ம61603/எம்/இ1 2021 நாள்.28.09.21
பார்வைாஇல் காணும் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதி நிலை அறிக்கை அறிவிப்பின்படி, கொரோணா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பு குறைப்பதற்கு தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மக்கள் பன்னி- என்கிற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் தொடச்சியாக, பார்வை 2ல் கண்டுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடிதத்தின் படி, எதிர்வருகின்ற அக்டோபர் 2, 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக் கல்வி சார்ந்து விவாதிக்கப்பட உள்ள கூட்டப்பொருளோடு, இந்த மக்கள் பள்ளித் திட்டமானது அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது என்பது சார்ந்த கூட்டப் பொருளையும் தவறாது சேர்த்து, கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, அக்டோபர் 2 2021 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து நிலை கல்வி அலுவலர்களும் (CEO DEO, DIET- Principal and Faculties, BED, ADPC, APO, HMS, EDCS, DCs and BRTES) கிராம சபை கூட்டங்களில் கண்டிப்பாக கலந்து கொண்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளை வழங்கி அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும் இத்திட்டத்தின் வாயிலாகப் பயனடைவதை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, இந்நிகழ்வினை சிறப்பு கவனத்து...ன் கண்காணித்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு - பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கடித நகல் மாநில திட்ட இயக்குநர் பெறுநர் முதன்மைக்கல்வி அலுவலர், அனைத்து மாவட்டங்கள்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment