ந.க.எண்.006547/கா.ம.நி-2/2021 காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு, சென்னை-04.
பொருள்
நாள்: 21.09.2021. சுற்றறிக்கை குறிப்பாணை - நலன் பிரிவு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 2021 - காப்பீடு தொடர்பான விவரங்கள் தெரிவித்தல் - தொடர்பாக. :
அரசாணை (பல்வகை) எண்.160, நிதி (ஊதியம் ) துறை, நாள்: 29.06.2021. பார்வை -000- பார்வையில் காணும் அரசாணையின் மீது அனைத்து பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்படுகிறது.
2) அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கு, பணச்செலவில்லா மருத்துவ வசதியை வழங்கும் பொருட்டு, ஏற்கனவே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்-2016, 30.06.2021 உடன் முடிவடைந்ததை தொடர்ந்து, பார்வையில் கண்ட அரசாணையின்படி, புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 2021 அமல்படுத்தப்பட்டு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
3) புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம், 2021-இல் உள்ள காப்பீட்டு விவரங்கள் மற்றும் வசதிகள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
1. காப்பீட்டு காலம்: மருத்துவ காப்பீட்டு வசதியானது, 01.07.2021 முதல் 30.06.2025 வரையிலான 4 வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும்.
2. காப்பீட்டு தொகை: அரசாணை (பல்வகை) எண்.160, நிதி (ஊதியம்) துறை, நாள்: 29.06.2021 இணைப்பு-1இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம்) வரை வழங்கப்படும். இணைப்பு-IA-இல் வகைப்படுத்தப்பட்டுள்ள 7 வகையான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) வரை வழங்கப்படும்.
🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்
No comments:
Post a Comment
Please Comment