சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

சுருக்கம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் - வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58லிருந்து 60ஆக (Completion of so years) உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்(சந42) துறை 

அரசாணை (நிலை) எண்.63 நாள் 08.10.2021. திருவள்ளுவர் ஆண்டு, 2052 பிலவ, புரட்டாசி 22 

படிக்கப்பட்டன :- 

1 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், 07.09.2021அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு. 2 இயக்குநர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அவர்களின் கடித ந.க.எண் 24020/சஉதி2/2021 நாள் 07.09.2021 

ஆணை: 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று, ஏனையவற்றுக்கிடையே, பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது:- “சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் தற்போது பணியிலிருக்கும் 23 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 575 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள்" 

2 மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் அவர்கள் மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வயது முதிர்வு ஓய்வு 60 வயதில் வழங்கப்பட்டு வருகிறது என்றும், அரசாணை (நிலை) எண்.2, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சஉதி.1)துறை, நாள் 23.04.1998-இல் மையங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கும் சமையல் உதவியாளர்களுக்கும் ஓய்வு பெறும் சமையல் உதவியாளர்களுக்கு தற்போது வரை வயது முதிர்வு ஓய்வு வந்து . . -டு 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் தபிபா 58-ஆக

சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

3. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58 லிருந்து 60 (Completion of 60 years) ஆக உயர்த்தி ஆணையிடுகிறது. 

4. இவ்வரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஆணையிடப்படுகிறது. 

5.இவ்வாணை நிதித்துறையின் இசைவுடன் அதன் அ.சா.எண்.39400/நிதி(சந/2021, நாள். 21.09.2021-ன்படி வெளியிடப்படுகிறது. 

(ஆளுநரின் ஆணைப்படி) ஷம்புகல்லோலிகர் 
அரசு முதன்மைச் செயலாளர் 

பெறுநர், 

இயக்குநர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சென்னை-15. இயக்குநர் மற்றும் குழும இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை, 'தரமணி. சென்னை-13. 

ஆணையர். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-3 ஆணையர், கரூவூலம் மற்றும் கணக்குத் துறை, சென்னை 35 அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள், சென்னை மதுரை முதன்மை மாநிலக் கணக்காயர், சென்னை-18/35. முதன்மை மாநிலக் கணக்காயர், சென்னை-18/35(பெயரில்) அனைத்து மாவட்டக் கரூவூல அலுவலர்கள் நகல்: முதலமைச்சர் அலுவலகம், சென்னை-9 மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை.9. முதன்மைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை-9, நிதித் (சந) துறை, சென்னை-9 மனித வள மேலாண்மைத் துறை, சென்னை-9 அனைத்துப் பிரிவுகள். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சென்னை-9. இருப்பிட தணிக்கை அலுவலர், தலைமைச் செயலகம், சென்னை-9 இருப்பு கோப்பு உதிரி நகல். //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// நாக்கு கா.இந்து பிரிவு அலுவலர் Corny Blol2021

No comments:

Post a Comment

Please Comment