கலா உத்சவ் - 2021 வழிகாட்டு நெறிமுறைகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கலா உத்சவ் - 2021 வழிகாட்டு நெறிமுறைகள்

கலா உத்சவ் - 2021 வழிகாட்டு நெறிமுறைகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அனைத்து வகை பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலைப் வகுப்பு பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற்றும் காண்கலை (Vocal music Instrumental music, Dance, Visual Arts) எனும் நான்கு பெருந்தலைப்புகளில் கலாஉத்சவ் போட்டிகள் 2015-16ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக்கல்வியாண்டிலும் (2021-22) இப்போட்டிகளை இணைய வழியாக (Online) நடத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. 
 
1.0 கலாஉத்சவ் மரபு (Legacy) சமூக அமைப்பின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, உயிர்ப்புடன் இருக்கும் பாரம்பரியக் கலைகளை மாணவர்கள் அறிந்திடும் வகையிலும், நமது கலை வடிவங்கள் பற்றிய அறிமுகத்தையும், புரிதலையும் உருவாக்கி அதன் மூலம் அவர்களின் கலைத்திறனைக் காட்சிப்படுத்த வழிவகை செய்யும் வகையிலும், கலா உத்சவ் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வுகள் வேறுபட்ட கலை கலாச்சாரங்கள் பற்றி பள்ளி, மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவுகளில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. 
 
மேலும் இந்தியாவின் கலாச்சார வளம் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அதனைப் புரிந்து கொள்வதன்மூலம் சமுதாய மேம்பாட்டிற்கும் மாணவர்கள் பயனுள்ளவர்களாக இருக்க முடியும் என்பதற்கும் கலாஉத்சவ் வழியமைக்கிறது. கலாஉத்சவ் நிகழ்வுகள் சமூகப் பொருளாதார பின்னடைவுகளில் இருக்கின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்(CWSN), ஆகியோர் பிற மாணவர்களுக்கு இணையாக கலைத் திறனை வெளிப்படுத்துவதற்கு வழியமைக்கிறது. 
 
இதில் Identification, Exploring, Understanding, Practicing and Showcasing எனும் ஐந்து நிலைகள் உள்ளன. இதில் ஒரு மாணவன் முழுமையாக ஈடுபட்டால் அது அந்தக் கலையினைப் படைத்தளித்தலோடு மட்டுமல்லாமல் அந்தக் கலையாகவே வாழத் தொடங்குகிறான். இதன்மூலம் தகுதியான மாணவனை அந்த வட்டாரத்தின் பாரம்பரிய கலையின் வருங்கால பிரதிநிதியாகப் (Ambassador) போற்றி வளர்ப்பதற்கும், பள்ளிகள் பாரம்பரிய கலைகளின் பயிற்சி கூடமாக மாறுவதற்கும் வழியமைக்கும். 2.0 பொதுவான வழிகாட்டி நெறிமுறைகள் : 
 
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2021-22) கலா உத்சவ் - 2021 போட்டிகள் மாணவ மாணவியர்தம் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபர் (solo) நிகழ்வுகளாக நடத்தப்படும். மேலும் மாணவர்களுக்கும் - மாணவியர்களுக்கும் என தனிப்பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது. Covid-19 தொற்று காரணமாக கலாஉத்சவ் 2021 போட்டிகள் அனைத்தும் இணைய வழியாகவே (online) நடத்தப்படவுள்ளது. இதுசார்ந்த காலக்குறிப்புகள் (Timeline) அவ்வப்போது அறிவிக்கப்படும். 21 கலை இனங்கள் கலா உத்சவ் 2021ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் யாவும் பாரம்பரிய / நாட்டுப்புற / செவ்வியல் சார்ந்த கீழ்க்கண்ட ஒன்பது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

 

No comments:

Post a Comment

Please Comment