ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் ஊக்கத் தொகை ரூ. 1 லட்சமாக உயர்வு ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிருத்துவ ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கான ஊக்கத் தொகை தலா ரூ. 1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 
 "முழுநேர முனைவர் பட்டப்படிப்பிற்கான ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சரவரம்பு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், மாணாக்கர்களின் எண்ணிக்கை 1200-லிருந்து 1600 ஆக உயர்த்தியும், ஒரு மாணவருக்கான ஊக்கத்தொகையினை ரூ. 50,000-லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது. 
 
 இத்திட்டத்திற்க்கென, 2021-22ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21ஆம் ஆண்டு முழுநேர முனைவர் பட்டப்படிப்பு ஊக்கத் தொகைத் திட்டத்தில் 1,124 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்." மே 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment