5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு தயாராகிறது தொலைத்தொடர்புத் துறை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு தயாராகிறது தொலைத்தொடர்புத் துறை!

5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கான விலை நிர்ணயம், குவாண்டம் தொழில் நுட்பம் மற்றும் அது தொடர்புடைய நிபந்தனைகள் பற்றி விவாதிக்க விரிவான கருத்துக் கேட்பு அறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது. டிராயிடம் மேலும் ஏலம் தொடர்பான விவரங்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை கேட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 4ஜி அலைபேசி நெட்வொர்க் பயன்பாட்டில் உள்ளது. 4ஜி சேவையால் இணைய வேகம் சிறு நகரங்களிலும் பண்மடங்கு பெருகியுள்ளது. இதன் மூலம் கல்வி, மருத்துவம், விவசாயம், ஸ்மார்ட் நகரங்கள் என புதிய புதிய தொழில் வாய்ப்புகள் சாத்தியமாகியுள்ளன. அந்த வரிசையில் நாடு 5ஜி சேவையை தொடங்க தயாராகி வருகிறது. இதன் மூலம் குறைந்த நேரத்தில், இடையூறு இல்லாமல் ஜிகாபைட் கணக்கில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். ஏர்டெல் உள்ளிட்ட அலைபேசி சேவை நிறுவனங்கள் 5ஜி பரிசோதனையை தொடங்கியுள்ளன.தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் 5ஜி ஏலத்திற்கு தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இன்று (நவ., 30) ஏலம் விடுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க கருத்துக் கேட்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. டிச., 28-க்குள் சம்பந்தப்பட்டவர்கள் கருத்துகளை வழங்கலாம். குறைந்தப்பட்ச ஏல விலை, அலைவரிசைத் திட்டம், ஏலம் விடப்படும் ஸ்பெக்ட்ரம் அளவு போன்றவற்றில் பரிந்துரைகளை வழங்குமாறு டிராயிடம் தொலைத்தொடர்புத் துறையும் கேட்டுள்ளது. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment