கேரளத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை The number of electric vehicles in Kerala has crossed one lakh - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேரளத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கை The number of electric vehicles in Kerala has crossed one lakh

கேரளத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கேரள மாநிலம் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் இ-மொபிலிட்டி திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. 

இதன்மூலம் மின்சார வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக மாநிலத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 2015 முதல் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கை 2015 இல் 27 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவரப்படி 1,02,334 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரளத்தில் 1 லட்சமாவது மின்சார வாகனப் பதிவினை அம்மாநில மோட்டார் வாகனத் துறை நேற்று கொண்டாடியது. திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 1,00,000வது வாகனமாக பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சாவியை, கொண்டோட்டியைச் சேர்ந்த கிரண் கே.பியிடம், போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு வழங்கினார். அப்போது, மாநிலத்தில் மாசு இல்லாத பசுமை எரிபொருளை ஊக்குவிக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது என்றார். 

மேலும், மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். நாட்டிலேயே தில்லிக்கு அடுத்தபடியாக மின்சார வாகன அதிகளவில் கேரளத்தில் உள்ளது என்று அமைச்சர் கூறினார். 

 The number of electric vehicles in Kerala has crossed one lakh. The government of Kerala has implemented an e-mobility scheme to promote electric vehicles. This provides incentives including subsidies for electric vehicles. Due to this, the number of electric vehicles in the state has increased since 2015. The number of electric vehicles in the state was 27 in 2015. Now this number has increased to 1,02,334 as on 23rd August. In this situation, the motor vehicle department of the state celebrated the registration of 1 lakh electric vehicles in Kerala yesterday. Transport Minister Antony Raju handed over the keys of the 1,00,000th registered electric scooter to Kiran KP from Kondoti at a function in Thiruvananthapuram. At that time, he said that the government has a policy to promote pollution-free green fuel in the state. Also, people are gravitating towards electric vehicles. The minister said that Kerala has the highest number of electric vehicles in the country after Delhi. 🔥👉இந்தச் செய்திப் பிடித்திருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யுங்கள்

No comments:

Post a Comment

Please Comment