தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் அறிவிப்பு

தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை- வானிலை மையம் அறிவிப்பு

சென்னை, 

 மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (29.12.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

(30.12.2023 மற்றும் 31.12.2023): தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

 (01.01.2024): தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும். " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Heavy rain warning for 3 days in southern districts-Meteorological department notification

Chennai,

  In the notification issued by the Chennai Meteorological Center regarding the rain, it is said; "Due to variation in speed of easterly winds, light to moderate rain may occur at a couple of places in Tamil Nadu today (29.12.2023) over Puduwai and Karaikal.

Kanyakumari and Tirunelveli districts received heavy rainfall at a couple of places.

(30.12.2023 and 31.12.2023): Light to moderate rain may occur at a few places in Tamil Nadu, Puduvai and Karaikal.

  (01.01.2024): Light to moderate rain may occur at a few places in Tamil Nadu, Puduwai and Karaikal. Kanyakumari, Tirunelveli, Thoothukudi and Ramanathapuram districts received heavy rainfall.

Weather Forecast for Chennai and Suburbs: The weather forecast for Chennai will be partly cloudy for the next 24 hours. Few parts of the city are likely to receive light rain.

The maximum temperature is likely to be 30-31°C and the minimum temperature is 23-24°C. " Thus it is said.

Besides, moderate rain with thunder and lightning is likely to occur in 9 districts of Chengalpattu, Thanjavur, Tiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Pudukottai, Ramanathapuram, Kanyakumari and Tirunelveli in the next 3 hours, the Meteorological Department said.

No comments:

Post a Comment

Please Comment