அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள்

அதிகரித்து வரும் தொற்று: சென்னையில், கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகள்

சென்னை, 

 இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஜே.என்1 வைரஸ் தொற்றால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 82 பேர் உள்பட தமிழகத்தில் 156 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகளுடன் தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தனி வார்டுகளில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தேவையான மருந்து மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தனி வார்டுக்கு டாக்டர்கள், நர்சுகள் தயார் நிலையில் உள்ளனர். 

 அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். 

தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Rising infection: In Chennai, separate wards for corona treatment

Chennai,

  Corona virus is increasing again in India. So far 4 people have been affected by JN1 virus infection in Tamil Nadu.

In this situation, 23 people have been confirmed to be infected with corona in Tamil Nadu the day before yesterday. 156 people are currently undergoing treatment in Tamil Nadu, including 82 in Chennai.

The Central Government has directed the State Governments to take precautionary measures against Corona.

Accordingly, separate wards with bed facilities have been kept ready for corona treatment in government hospitals including Rajiv Gandhi, Kilpakkam, Stanley, Rayapetta in Chennai.

Ventilator and oxygen facility has been established in separate wards.

Necessary medicines are also kept in stock. Also, doctors and nurses are ready for the separate ward.

  Considering the increasing incidence of corona virus, pregnant women and people with co-morbidities should wear masks while going to public places.

Tamilnadu health department officials have advised to maintain personal distance.

No comments:

Post a Comment

Please Comment