டுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை ,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 24-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி,நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chance of rain in 14 districts in next 3 hours
Chennai ,
Light rain may occur at one or two places in South Tamil Nadu districts from today to 24th due to atmospheric low circulation prevailing over Southeast Arabian Sea and adjoining areas.
North-East districts, Puduwai and Karaikal are likely to witness dry weather. The Meteorological Department had informed that there is a possibility of light fog in a couple of places in Tamil Nadu in the morning. In this situation, there is a possibility of rain in 14 districts in the next 3 hours.
Accordingly, light to moderate rain is expected in Nagai, Tiruvarur, Tanjore, Pudukottai, Ramanathapuram, Sivagangai, Madurai, Dindigul, Theni, Thenkasi, Nellai, Virudhunagar, Thoothukudi and Kanyakumari districts.
No comments:
Post a Comment
Please Comment