தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என அறிவிப்பு Dry weather forecast for the next two days in Tamil Nadu - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என அறிவிப்பு Dry weather forecast for the next two days in Tamil Nadu

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என அறிவிப்பு 

சென்னை, 

 சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; 

 "இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 15.01.2024 மற்றும் 16.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

17.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18.01.2024 மற்றும் 19.01.2024: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.0.01.2024 மற்றும் 21.01.2024: 

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Dry weather forecast for the next two days in Tamil Nadu

Chennai,

  According to the notification issued by Chennai Meteorological Center;

  "An atmospheric low circulation is prevailing over Southwest Bay of Bengal along the Sri Lankan coast. 15.01.2024 and 16.01.2024: Dry weather is likely over Tamil Nadu, Puduwai and Karaikal. Light fog is likely at a couple of places in Tamil Nadu during morning hours.

17.01.2024: Dry weather may prevail over Tamil Nadu, Puduwai and Karaikal. 18.01.2024 and 19.01.2024: Light rain may occur at one or two places in south-eastern districts. Dry weather is likely to prevail over North-East districts, Puduwai and Karaikal.0.01.2024 and 21.01.2024:

Dry weather is likely to prevail over Tamil Nadu, Puduwai and Karaikal. Weather Forecast for Chennai and Suburbs: Partly cloudy skies for the next 48 hours. Light fog is likely to occur at a few places in the city during the morning hours.

Maximum temperature is likely to hover around 31-32 degree Celsius and minimum temperature is likely to hover around 22 degree Celsius," it said.

No comments:

Post a Comment

Please Comment