சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என்று பொதுமக்களை யுஐடிஏஐ கேட்டுக் கொண்டுள்ளது. டிராய் எனப்படும் இந்தியt தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதன்மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என சவால் விடுத்தார்.
இதன் பின்னர் சில மணி நேரங்களில், சர்மாவின் ஆதார் எண்ணைக் கொண்டு அவரின் மொபைல் எண், மாற்று மொபைல் எண், முகவரி, இமெயில் முகவரி, பிறந்த தேதி, பான் எண், பிறந்த மாநிலம், தற்போது வசிக்கும் வீட்டின் முகவரி உள்ளிட்ட தகவல்களை , ஆன்டர்சன் என்ற ஹேக்கர் வெளியிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. இந்நிலையில் ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதளம் உள்ளிட்ட பொதுவெளிகளில் ஆதார் எண்களை பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Please Comment