1745 மாணவ, மாணவிகள் படித்து வரும் அரசு பள்ளியில் நேர்மை அங்காடி திறப்பு
காடையாம்பட்டி அருகே பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக நேர்மை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நேர்மை, நல்லொழுக்க நெறிகளை கற்றுக்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். காடையாம்பட்டி அருகே உள்ள பண்ணப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல் நிலைப்பள்ளியில் 1745 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் மணிவண்ணன் உள்பட 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் வாங்க வேண்டும் என்றால் பள்ளிக்கு வெளியே சென்று தார்சாலையை கடந்து வாங்க வேண்டி உள்ளது. மேலும் கடைகளில் வாங்கும் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment
Please Comment