School morning prayer - ThulirKalvi Blogs

Latest

Search This Site

School morning prayer



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்

07.08.18

திருக்குறள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

விளக்கம்

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

பழமொழி

Health is wealth

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

இரண்டொழுக்க பண்பாடு


1.நான் எந்த சூழ்நிலையிலும் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன்.

2.பிறர் செய்யும் நற்செயலுக்கு மதிப்பு அளிப்பதுடன், அதனை தொடர்வேன்.

பொன்மொழி


உங்கள் உடல் நலனை எப்படி பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.
-ஜவஹர்லால் நேரு

பொதுஅறிவு

1.இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யார்?
திருமதி. நிர்மலா சீத்தாராமன்

2.நமது நாட்டின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
திரு. ரவீந்திரநாத் தாகூர்

English words and. Meanings

Everybody------ ஒவ்வொருவரும்
Exhibition-------கண்காட்சி
Empire------பேரரசு
Embassy------தூதரகம்
Expression------ முகபாவனை

நீதிக்கதை

பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள் !
அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.
அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட,
படகெடுத்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.
அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும்.
ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்துவிடும்.
மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை.
ப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர் !
இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டு வந்தனர் !
ஆயினும்,
அத்தனை பெரிய கடற்பரப்பில் நீந்திக்கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப் போவதாக மீண்டும் குறை !
யோசித்த மீனவர்கள்  புதிதாக ஒரு யோசனை செய்தார்கள்.
குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள்.
இந்தச் சுறாவிடமிருந்து தப்பிப்பதற்காக... அந்த மீன்கள்戀撚呂 எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி.
இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள்戀呂 முன்னெப்போதையும் விட மிகச் சுவையானதாக இருந்தனவாம்.
வாழ்க்கையும் அப்படித்தான்...!!! வாழ்க்கை சுவைக்க கவலைகளோடே கிடக்கக்கூடாது. சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே祿⛹️️ இருக்க வேண்டும். பிரச்சனைகள் என்கிற சுறா麗 இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன்கள்呂戀撚 சுவையானதாக இருக்கும். பிரச்சனைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம் ! சோம்பிக்கிடப்போம் !!!!
சுறுசுறுப்பாக ஓடி祿 வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம் !


இன்றைய செய்திகள்


07.08.2018

 தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 31க்குப் பிறகு 3 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சேலம் 8 வழிச்சாலை வழக்கில் ஒரு நில உரிமையாளர் நாடினாலும் விசாரணை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசின் வாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் பதிலளித்துள்ளது.


ஸ்பெயினில் நடைபெற்று வரும் கோடிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் வலுவான அர்ஜென்டினா யு-20 அணியை இந்திய யு-20 அணி வென்றது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்றதை அடுத்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆனார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இதன் மூலம் முதலிடத்தை பெறும் 7-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


No comments:

Post a Comment

Please Comment