2019ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2019ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்

புதுச்சேரி அரசு அறிவிப்பு--


வரும் 2019ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை, புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.புதுச்சேரி அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், புதுச் சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிற நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இதற்கான அரசாணையை, கவர்னரின் உத்தரவுபடி, புதுச்சேரி அரசின் உள்துறை வெளியிடும். வரும் 2019ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 






இதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளுக்கும் 16 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14ம் தேதி), தீபாவளி பண்டிகை (அக்டோபர் 27ம் தேதி) ஆகியவை ஞாயிற்று கிழமைகளில் வருவதால், பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் 17 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 1ம் தேதியன்று, வருடாந்திர கணக்குகள் முடிக்கும் தினம் என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, வரையறுக்கப்பட்ட விடுமுறை என்ற அடிப்படையில், 41 விடுமுறை நாட்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment