'மினி ஆராய்ச்சி' திட்டத்துக்கு தேவை 'மெகா' விழிப்புணர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

'மினி ஆராய்ச்சி' திட்டத்துக்கு தேவை 'மெகா' விழிப்புணர்வு

கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் முதுநிலை மாணவர்களுக்கான,'மினி ஆராய்ச்சி திட்டம்'குறித்த விழிப்புணர்வு முறையாக ஏற்படுத்தப்படவில்லை என, கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.அரசு மற்றும் உறுப்பு கல்லுாரி இறுதியாண்டு முதுநிலை மாணவர்கள் மத்தியில், ஆராய்ச்சி செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், மினி ஆராய்ச்சி திட்டம்' செயல்பாட்டில் உள்ளது.







இதனை பயன்படுத்தி மாணவர்கள் சிறிய அளவிலான ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். இதற்கு, தேர்வு பெறும் ஒரு மாணவருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வீதம் ஒதுக்கப்படும்.ஆனால், மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சொற்ப அளவிலான மாணவர்கள் மட்டுமே, ஆண்டுதோறும் இந்நிதியை பெறுகின்றனர்.கல்வியாளர் கிருஷ்ண வேணி கூறுகையில், ''வெறும் சுற்றறிக்கையுடன், இத்திட்டம் முடங்கி விடுகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தி விண்ணப்பிக்க, பேராசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. மினி ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியும், போதுமானதாக இல்லை. திட்டத்தை விரிவுப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

Please Comment