எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றின் முதல் தர அங்கீகாரம் பெற்றுள்ளது.
இப்பல்கலைக்கழகம் தொலை தூரக் கல்வியை வழங்க பல்கலைக் கழக மானியக் குழு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போது இங்கு பி.பி.ஏ., பி.காம்., பி.ஏ. (ஊடகவியல்), பி.ஏ. (ஆங்கிலம்), எம்.ஏ. (ஆங்கிலம்) ஆகிய 5 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டு முதல் யோகா, நுண்கலை, எம்.பி.ஏ. ஆகிய பிரிவுகளும் தொடங்கப்படுகின்றன.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையங்கள் ராமாபுரம், வடபழனி, திருச்சி வளாகங்களில் செயல்படுகின்றன. இங்கு தொலைதூரக் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு +91 44 27417040/2745 5510 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது director.dde@srmuniv.ac.in மற்றும் admissions.india@srmuniv.ac.in ஆகிய முகவரிகளுக்கு இ-மெயில் அனுப்பலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment