பள்ளி வாழ்க்கை என்னும் புதியதொரு அத்தியாயத்தை என் குழந்தை துவங்குவதற்கு நான் அவளுக்கு எவ்விதத்தில் உதவ முடியும்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளி வாழ்க்கை என்னும் புதியதொரு அத்தியாயத்தை என் குழந்தை துவங்குவதற்கு நான் அவளுக்கு எவ்விதத்தில் உதவ முடியும்?

குழந்தைகளுக்கு மன அழுத்தம் அல்லது பதட்டம் எற்படுவதென்பது ஓர் அரிதான விஷயம் அல்ல. பெரியவர்களைப் போன்றே, குழந்தைகளும் அவர்களுக்கே உரித்தான பிரச்சினைகளுடன் போராட வேண்டியிருக்கிறது. இக் காரணங்களைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்குப் பயன்படும் வகையில் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கியுள்ளோம். இக்கட்டுரைகள் யாவும் இன்றைய உலகில் குழந்தைகள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கவிருப்பதால், பள்ளி செல்ல தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள, 

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு இத்தகவல்கள் பயன்படும் என்று நான் நினைக்கிறேன். பெற்றோர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும், பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதாகிய இந்தப் பெரும் பயணத்தில் எதிர்கொள்ள வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ளச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இதன் மூலம் அவர்களது பதட்டம் மற்றும் மனஅழுத்தம் குறையக் கூடும். வளரும் பருவத்தில் பள்ளி செல்வதென்பது வழக்கமாக நடைபெறக்கூடிய செயல்தான் என்றாலும், சிறு குழந்தைகளுக்கும், குடும்பத்தில் உள்ள மற்ற அனைவருக்கும் இதுவே பெருமளவில் மன அழுத்தத்தைத் தரவல்லதாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லத் தயாராதல் என்ற சொற்றொடர் மழலையர் பள்ளிகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகும். பள்ளிக்குச் செல்லத் தயாராதல் என்பது ஒரு குழந்தை சமுதாயம் மற்றும் கல்வி சார்ந்த ஒரு சூழலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தயார்படுத்திக் கொள்வதாகும். வேறுவிதமாகச் சொல்லப்போனால் ஒரு குழந்தை கல்வி கற்க ஆரம்பிக்க தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதாகும். தன் வேலைகளைத் தானாகவே எவ்வாறு செய்துகொள்வது என்பதைக் கற்றுக் கொள்ளத் தொடங்கும் ஒரு முயற்சியாகும். 

 கின்டர்கார்டன் என்னும் மழலையர் பள்ளிகள் குழந்தைகளை ஒரு முழுமையான கல்விச்சூழலுக்கு தயார்ப்படுத்துகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் ஜனவரிக்குள் எழுத்துக்கள் முழுவதுமாகக் கற்பிக்கப்படுகின்றன. கின்டர்கார்டன் வகுப்புகளை முடித்து முதல் வகுப்பில் குழந்தைகள் நுழையும்போது எழுத்துக்களை நன்கு கற்றுக் கொண்டுவிடுகின்றனர். எழுத்துக்களைச் சேர்த்து வாசிப்பது எவ்வாறு என்பதையும் கற்றுக்கொண்டு விடுகின்றனர். வரவிருக்கும் கல்வியாண்டிற்கு, பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் தயார்ப்படுத்திக்கொண்டால் பள்ளி செல்வது தொடர்பாக ஏற்படும் மன அழுத்தங்களையும், பதட்டங்களையும் குறைத்துக்கொள்ள முடியும். மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் உங்கள் குழந்தையிடமிருந்து என்னென்ன எதிர்பார்க்கப்படுகிறது, குழந்தை எதிர்கொள்ளக்கூடிய குறிப்பிடத்தக்க புதிய பிரச்சினைகள் என்னென்ன என்பதாகும். குழந்தை எதிர்கொள்ளப்போகும் புதிய பிரச்சினைகளைப் பற்றி குழந்தியிடம் விவாதிப்பதும் கூட சிறந்த முறையில் குழந்தையையும் நம்மையும் தயார்படுத்திக்கொள்ளும் ஒரு வழி முறையாகும். குழந்தையை சிறந்த முறையில் தயார்ப்படுத்துவதனால் அது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதற்கு எளிதாகிப் போகும். 

 குழந்தைகள் நன்றாக ஓய்வெடுக்கின்றனரா, நல்ல உறக்கம் கொள்கின்றனரா என்பதையும் பெற்றோர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் முன் காலை உணவு அவசியம் உட்கொள்ளச் செய்ய வேண்டும். பள்ளிக்குச் செல்லும் எல்லா நாட்களிலும் காலை உணவும், போதிய ஓய்வும் உறக்கமும் கொள்வது அவசியம் என்றாலும், பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த முதல் சில நாட்களில் இவற்றையெல்லாம் குழந்தைகள் பெறுகின்றனரா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். களைப்படைந்த குழந்தைகள் வெகு விரைவில் மனப்பதட்டம், அமைதியிழந்து காணப்படுதல், பொறுமையின்றி இருத்தல், விரக்தியடைதல் ஆகிய நிலைக்குத் தள்ளப்படலாம். பள்ளிக்கு அனுப்பும் முன்பாக குழந்தைக்கு முழு மருத்துவப் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment

Please Comment