திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே பன்னாங்கொம்பு அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கஜா புயலால் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து வகுப்பறையில் இருந்த பல்வேறு கல்வி உபகரணங்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து கிராம பொதுமக்களால் முடிந்த அளவு பொருட்களை பள்ளிக்கு வழங்கிட முடிவு செய்தனர். அதன்படி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பீரோ, டேபிள், நாற்காலி, தண்ணீர் அண்டா, விளையாட்டுப் பொருட்கள், மாணவ, மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளியின் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக பொருட்களை பள்ளிக்கு எடுத்து வந்தனர். பள்ளிக்கு வந்த கிராம மக்களை மாணவ, மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்று அழைத்துச் சென்றன
No comments:
Post a Comment
Please Comment