முதல் முறை ஊதியம் பெறுபவர்கள் செய்ய வேண்டிய நிதி செயல்கள் படித்து முடித்து பணிக்கு சேர்ந்து, முதல் முறையாக சம்பாதிக்கத் துவங்குவது, சுதந்திர உணர்வையும், உற்சாகத்தையும் அளிக்க கூடியது.
சுயமாக சம்பாதிப்பது மகிழ்ச்சி அளிப்பது என்றாலும், புதிதாக வருமானம் ஈட்டத்துவங்குபவர்கள், தங்கள் பணத்தை சரியாக நிர்வகிக்க கற்றுக் கொள்வது அவசியம். இதற்கு கைகொடுக்கக் கூடிய நிதி செயல்பாடுகளை பார்க்கலாம்.பட்ஜெட் முக்கியம்: சுயமாக சம்பாதித்த பணம் கையில்இருக்கும் போது, விருப்பம் போல செலவு செய்ய தோன்றுவது இயற்கையானது.
ஆனால், அதைவிட முக்கியமானது,வருமானத்தை பட்ஜெட் போட்டு செலவிடுவதாகும். இது,வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமிக்க உதவும்.வரிகளில் கவனம்: சம்பாதிக்க துவங்கும் போதே சேமிப்பையும் துவக்குவது, நீண்ட கால நோக்கில் பயன் அளிக்கும். அதே போல, வரி விதிப்பு தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்து வைத்திருப்பது, நிதி திட்டமிடலும் கைகொடுக்கும்.
வரி அம்சங்கள் சிக்கலானவை எனக் கருதாமல், அவற்றின்செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டும்.முதலீட்டை துவங்குங்கள்: சேமிப்பின் உண்மையான பலனைமுதலீடு செய்வதன் மூலமே பெற முடியும். அதிலும் ஆரம்ப காலத்திலேயே முதலீடு செய்ய துவங்குவதன் மூலம், கூட்டுவட்டியின் பலனை முழுமையாக பெறலாம்.
சேமிக்க போதிய பணம் இல்லை எனக் கூறாமல், குறைந்தபட்ச தொகையை, எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்ய வேண்டும்.காப்பீட்டில் கவனம்: ஆரம்ப காலத்திலேயே காப்பீடு பெறுவதும் அவசியம்.
இதுவும் குறுகிய காலத்தில் செலவாக தோன்றினாலும், நீண்ட கால நோக்கில் நிதி பாதுகாப்பு அளிக்க கூடியது. முறையான ஆலோசனை பெற்று, போதுமான ஆயுள் காப்பீடு பாலிசி பெறுவதோடு, மருத்துவ காப்பீடும் பெற்றுக் கொள்ள வேண்டும்.பி.எப்., திட்டம்:
ஊழியர்களுக்கான, பி.எப்., திட்டம் ஓய்வுகாலத்தில் பலன் தரக்கூடியது. பெரும்பாலான நிறுவனங்களில், பி.எப்., திட்டம் கட்டாயமாக இருக்கும். எனினும், நிறுவனம் இந்த பிரிவில் வரவில்லை என்றால், பி.எப்., திட்டத்தில் இணைவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். என்.பி.எஸ்., திட்டத்தையும் பரிசீலிக்கலாம்.முதல் முறை ஊதியம் பெறுபவர்கள் செய்ய வேண்டிய நிதி செயல்கள்முதல் முறை ஊதியம் பெறுபவர்கள் செய்ய வேண்டிய நிதி செயல்கள்
No comments:
Post a Comment
Please Comment