10 ரூபாய் செலவில் சென்னையை சுற்றிப்பார்க்கலாம்!
புத்தாண்டு தினத்தில் 10 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தி 9 மணி நேரத்திற்கு பேருந்தில் சென்னை மாநகரை சுற்றிப் பார்க்கும் திட்டத்தை தமிழக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
மக்களிடையே சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்குடனும், சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், 10 ரூபாய் மட்டும் கட்டணமாக செலுத்தி சென்னை நகரை சுற்றிப் பார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த சலுகை புத்தாண்டு தினத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலாப் பொருட்காட்சி வளாகத்தில் இருந்து தொடங்கும் இந்த பயணம்
மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேரலாயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில் மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் 15 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துவிட்டால், சுற்றுலா கழக பேருந்துகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த சுற்றுலா தளத்தில் வேண்டுமானாலும் ஏறலாம்,
எந்த சுற்றுலா தளத்தில் வேண்டுமானலும் இறாங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு 1800 42531111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Travel to Chennai on New Year's Day Rs 10 / -
The Tamil Nadu Tourism Development Authority has announced that it will be touring the city of Chennai for a fee of just Rs 10 to promote tourism among the masses. The offer is only available on New Year's Day.
The tour, which starts from the premises of the Chennai Archipelago, is scheduled to return to Marina Beach, Vivekananda Home, Lighthouse, Bezant Nagar, Velankanni Paralayam, Ashtalakshmi Temple, Arukkadai Murugan Temple and Kindi Children's Park.
It has been announced that 15 buses of the Tourism Development Corporation will be operated. It has been announced that tourists can board any tourist site between 9am and 6pm if they get a ticket for 10 rupees. For more information, contact the toll-free number 1800 42531111.

No comments:
Post a Comment
Please Comment