உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய தேவையான "வைட்டமின் டி"
சென்னை: வைட்டமின் டி உடலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கிய தேவையான ஒன்றாகும். இந்தியாவில் சமீபகாலங்களாக இந்த பற்றாக்குறை அநேகம் பேருக்கு தொற்றி வருகிறது.
இந்தியாவில் வாழும் 70 சதவீத மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உடல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் டி குறைபாடு உடலில் பல்வேறு உபாதைகளையும் உண்டாக்குகிறது.
உடலானது சூரிய ஒளியில் படும்போது இந்த வைட்டமின் டி சத்தை உற்பத்தி செய்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மக்கள் சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்துக்குள் முடங்கி விடுவது அதிகரி த்து வருகிறது.
பள்ளிகளிலும் பிள்ளைகள் திறந்த வெளியில் விளையாடுவது குறைந்து வருகிறது. அப்படி வெளியில் செல்பவர்களும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.இவை தேவையான அளவு சூரிய ஒளியை கிரகித்துகொள்வ தில்லை என்பதால் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்துவருகிறது.
இதை சரிசெய்யும் உணவு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உடலில் 20 நானோகிராமுக்கும் குறைவாக இருப்பதையே வைட்டமின் டி குறைபாடு என்கிறோம்.
முதுகுவலி, தசைவலி, உடல் வலி, காரணமே இல்லாமல் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
இவற்றை அலட்சியப்படுத்தும் போது எலும்புகள் வலுவிழக்கும், பற்கள் நரம்புகளில் பாதிப்பை உண்டாக்கும்.
குறைபாடை நிவர்த்தி செய்யாவிட்டால் எலும்பு அழற்சி, எலும்பு புரை என எலும்பு சார்ந்த நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு,
சிலருக்கு அதிகப்படியான குறைபாடு உண்டாகும் போது முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனைகளும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
தினமும் ஒரு தம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும்.
பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் பால் குடிப்பது அவசியம் என்கிறார்கள். பசும்பால் போன்று சோயா பாலிலும் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருக்கிறது.
பால் பொருள்களில் யோகர்ட் தினமும் சேர்த்து வரலாம்.
செயற்கை இனிப்புகள் கலந்து வெளியில் விற்கப்படும் யோகர்ட்டை வாங்காமல் வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது. உணவு பொருள்களில் காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும்
இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்திருக்கிறது.
அடிக்கடி இதை க்ரேவியாகவோ, பிரியாணியில் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம்.
சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மஷ்ரூம்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Vitamin D is the most essential for physical health Archives:
Vitamin D is one of the most essential for the body and health. This shortage has plagued many in India in recent years. According to a study, 70% of people in India have vitamin D deficiency. Vitamin D deficiency, which plays an important role in the development of the body, can cause a variety of disorders in the body.
It is noteworthy that this body produces vitamin D when the body is exposed to sunlight. Increasingly, people are freezing indoors or in the office without sunlight. In the schools, children's play outdoors is declining.
Outdoorsmen also use sunscreen lotions to protect them from sunlight. Vitamin D deficiency is on the rise, as they do not absorb enough sunlight. Learn about diets that fix this. Vitamin D deficiency means less than 20 nanograms in the body. Back pain, muscle spasms, body pain, and body fatigue can cause problems.
When ignored these tend to weaken the bones and damage the teeth. Doctors have warned that if not addressed, osteoarthritis and osteoarthritis can lead to osteoarthritis. Drinking a milk every day can provide up to 20 percent of the vitamin D required by the body. Milk contains calcium, phosphorus and riboflavin.
People who don't eat non-vegans say they need to drink milk. Soy milk, like cow's milk, is rich in vitamins and minerals. Yogurt in dairy products can be added daily. It is better to eat homemade yoghurt without having to buy artificial sweeteners.
Mushrooms are rich in vitamin D in foods. This Mushroom is rich in Vitamin B1b2b5 nutrients and copper. Frequently, it can be cooked and served with gravy or biriyani. It is noteworthy that Vitamin D is rich only in mushrooms grown and sold in the open by sunlight.

No comments:
Post a Comment
Please Comment