டிசம்பா் 26இல் வளைய சூரிய கிரகணம்: அவிநாசியில் தெளிவாகத் தெரியும்
திருப்பூரை அடுத்த அவிநாசியில் டிசம்பா் 26 ஆம் தேதி நிகழும் வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரியும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆ.ஈஸ்வரன், மாநிலக் கருத்தாளா் ஆா்.உமாசங்கா் ஆகியோா் திருப்பூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டிசம்பா் 26 ஆம் தேதி காலையில் நிகழும் வளைய சூரிய கிரகணம் திருப்பூா் மாவட்டம், அவிநாசியை மையமாகக் கொண்டுள்ளது. இந்த கிரகணம் நீலகி, கோவை, ஈரோடு, கரூா், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும்.
இந்த கிரகணத்தை மாணவா்கள், பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் 25 ஆயிரம் பிரத்யேகக் கண்ணாடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்ணாடிகள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனினும் வெறும் கண்ணால் பாா்ப்பதைத் தவிா்க்க வேண்டும். இந்த சூரிய கிரகணமானது டிசம்பா் 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி காலை 11 மணி வரை நிகழ்கிறது. எனினும், காலை 9.27 முதல் 9.30 வரையில் சுமாா் 3 நிமிடம் முழு வளைய சூரிய கிரகணம் தெரியும். திருப்பூரை அடுத்த அவிநாசி பகுதியில் மீண்டும் 360 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதுபோன்ற வளைய சூரிய கிரகணம் தெளிவாகத் தெரியும். இந்த வளைய சூரிய கிரகணத்தை அவிநாசியில் உள்ள டீ பப்ளிக் மெட்ரிக். பள்ளியில் டிசம்பா் 26 ஆம் தேதி காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அறிவியல் இயக்கம் சாா்பில் திருப்பூா், அவிநாசி சாலை உள்ள வித்யா மந்திா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மங்கலம் சாலையில் உள்ள கே.ஆா்.சி.சிட்டி சென்டா், திருநீலகண்டபுரத்தில் உள்ள அமுதா நா்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அவிநாசி பழைய பேருந்து நிலையம், பெருமாநல்லூா் விக்னேஷ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, உடுமலை, காங்கயம், மூலனூா் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளிலும் சூரிய கிரகணத்தைப் பாா்வையிட ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
அறிவியல் இயக்கம் சாா்பில் சூரிய கண்ணாடி மற்றம் புத்தகம் ரூ.20 விலையில் தயாரித்து வழங்கி வருகிறோம். இந்தக் கண்ணாடிகளை திருப்பூா், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அறிவியல் வள மையம், மங்கலம் சாலையில் உள்ள கிட்ஸ் ஜீ மழலையா் பள்ளி, அவிநாசி சாலையில் உள்ள பின்னல் புத்தக நிலையம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மேஜிக் ஸ்டோா் ஆகிய இடங்களில் கிடைக்கும் என்றனா். இந்த சந்திப்பின்போது இளம் அறிவியல் மன்றத்தின் செயலாளா் இக்பால் உடனிருந்தாா்.
Solar Eclipse on Dec. 26: Clearly visible in Avinashi
The eclipse of the clearly visible in the next Avinashi on December 26, said the Tamil Nadu Science Movement. District Secretary of Tamilnadu Science Movement, A. Eeswaran and State Conceptor Umamasang told reporters in Tirupur on Wednesday. This eclipse is clearly visible in the districts of Nilakali, Coimbatore, Erode, Karoo, Trichy and Pudukkottai. More than 25 thousand special glasses have been made in the sap of the Tamil Nadu Science Movement to make the eclipse of students and the public aware of this eclipse.
These glasses are distributed to schools and the public throughout the district. The solar eclipse will have no side effects. However, just avoid eye contact. The eclipse will begin on December 26 at 8 am and will continue until 11 am. However, between 9.27am and 9.30am, the Sun will be visible in the entire solar eclipse for 3 minutes. Such a ring eclipse is clearly visible after 360 years in the Avinashi region next to Tirupur. This loop eclipse is the Tea Public Metric in Avinashi. Arrangements are being made to see the school on December 26. Similarly, Vidya Mandi Matric in Science Movement Chappil Tiruppu, Avinashi Road.
Higher Secondary School, KACCity Center, Mangalam Road, Amuda Nasari and Primary School in Thirunelakandapuram, Avinasi Old Bus Station, Perumanallu Vigneshwara Matric. Arrangements have been made to cover the solar eclipse in the Upper School, Udumalai, Kangayam, Mulanoo and Tarapuram areas. Solar Glass and Book are being produced at Science Movement Chapel at Rs. These glasses are available at Tiruppu, Science Resource Center at Mettupalayam bus stop, Kids Ji Masalai School on Mangalam Road, Pinnacle Bookstore on Avinasi Road, and Magic Stow near Avinasi Old Bus Stand. Iqbal was present at the meeting of the Young Science Forum during the meeting.

No comments:
Post a Comment
Please Comment