தனது முதலாவது 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Realme
Realme ஆனது சீன ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான Oppo நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனமானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தனது முதலாவது 5G ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 7 ஆம் திகதி Realme X50 5G எனும் குறித்த கைப்பேசியினை சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவலானது சீனாவின் மைக்ரோ ப்ளாக் இணையத்தளமான Weibo வில் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு வகையான பிரதான நினைவகங்களுடன் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அவற்றில் ஒன்று 8GB RAM உடையதாகவும், மற்றையது 12GB RAM உடையதாகவும் காணப்படுகின்றது. இவற்றின் விலைகள் முறையே 27,999 இந்திய ரூபாய்கள் ஆகவும், 34,999 இந்திய ரூபாய்கள் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Realme is launching its first 5G smartphone
Realme, a subsidiary of Chinese smartphone company Oppo, is launching its first 5G smartphone. The company will launch its first 5G smartphone in January next year.
Accordingly, on January 7, the handset of Realme X50 5G will be launched in China. This information has been published on China's microblog website, Weibo.
The phone will be introduced with two main types of memory. One of them has 8GB of RAM and the other has 12GB of RAM. Prices of these will be 27,999 Indian rupees and 34,999 Indian rupees respectively.

No comments:
Post a Comment
Please Comment